dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Saturday, December 31, 2016

SADHA SADHA UNNAI - RAJAVIN RAMANA MALAI

Narayanan Swaminathan writes:

The King's Treasuries - 11

சதா சதா உன்னை
நினைந்து நினைந்து உன்னில்
கலந்திடவே அருள்வாய் ரமணா..
சதா சலித்துச்சளைத்த மனதினிலே
சதாசிவா என்றுனை ஓர் நொடிப்பொழுதும் இடைவிடாது..

***************
நம் இசை மரபில் ஸ்வராக்ஷரம் என்று ஒரு அம்சம் உண்டு. அதாவது சரிகமபதநி என்று 7 ஸ்வரங்கள் உள்ளன அல்லவா..அவை எழுத்துக்களாகவும் உள்ளவை தானே. அந்த ஸ்வரங்கள் வார்த்தைகளாகவும் கையாளப்பட்டால் அது தான் ஸ்வராக்ஷரம் என்று அழைக்கபடுகிறது.

உதாரணத்திற்கு 'ச ரி' என்ற ஸ்வரங்களை எடுத்துக் கொள்வோம். 'சரி' என்ற சொல் பாடலில் வரும் பொது இந்த ஸ்வரங்களை வாசித்தால் அது தான் ஸ்வராக்ஷரம்.. அதாவது ஸ்வரமும் பொருளும் ஒன்றாக வருவது.
அகஸ்தியர் படத்தில் வரும் 'வென்றிடுவேன்' பாடல் ஒரு நல்ல உதாரணம். பாடலில் பல விதமான ஸ்வராக்ஷரங்கள் பயன்படுத்தியிருப்பார் குன்னக்குடி வைத்யநாதன்.

சமமா..சரிசமமா
மநிதா (மனிதா).. பாதக மனிதா
சாகசமா..பரிகாசமா

லலிதா பத்மினி சிவாஜி நடித்த தூக்குத்தூக்கி  படத்தில் வரும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் பாட்டிலும்  உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது. மாமா குரங்கு, பாப்பா குரங்கு, தாத்தா குரங்கு என்ற இடங்களில்  மா..மா பா..பா தா..தா என்ற ஸ்வரங்களே வரும்..

பலே பாண்டியாவை மறக்க முடியுமா.. சுத்த தன்யாசியில் நீயே உனக்கு என்றும் நிகரானவன் பாடலில்.. நிரவல் பாடும் போது சிவாஜி 'மா மா' என்று ஸ்வரம் பாட அதை 'மேதாவியான' அவர் மாமனார் (எம் ஆர் ராதா) தன்னைத் தான் மாமா என அழைக்கிறார் என்று பதிலுக்கு ஜதியோடு 'மாப்ளே' என்று பாட.. தன் வருங்கால மாமனாரின் இசை அறிவைக் கண்டு வியக்கும் சிவாஜியின் ரியாக்ஷனை காணக் கண் கோடி வேண்டும்.

அதுவும் ஸ்வராக்ஷரம் தான்.

*********

ராஜாவும் ஸ்வராக்ஷரம் அமைத்திருக்கிறார். 'அவர் எனக்கே சொந்தம்' படத்தில் கபி கபி என்ற பாடல் வீ.கே.ராமசாமி பாகவதர் வேடத்தில் பாடுவார். கல்யாணியில் 'நிகரிநி ' என்ற பிரபலமான பிரயோகத்தை 'நிக்கிற நீ உட்காரு நீ' என்று காமெடி செய்திருப்பார்.. அதன் பின் மணிப்பூர் மாமியார் என்ற படத்தில் 'சமையல் பாடமே' என்ற பாடலில் நிறைய ஸ்வராக்ஷரம் பயன்படுத்தி இருப்பார். 'என்ன சமையலோ' என்ற உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் அதே பாடல் தான். சிறு மாற்றங்களுடன்..

https://www.youtube.com/watch?v=LPUrWd6NCSY

கரி கரி கரி..கறிகாய்களும் எங்கே
மாமம மமம .. மஞ்சள் பொடியும் எங்கே
பபபபபப தா.. பருப்பு இருக்குதா
தநி தநி ..தனியா இருக்கா
இது வரை கல்யாணி..

பின் வசந்தா.. அப்பா வரும் நேரம் ..'சாதமாக தாமதமா'..
'கமகமகம' வாசம் வருதே..'மசா' லா
'சரிசரிசரி' விளையாட்டுகள் போதும் கமதா 'மதநி' (மதனி ) சாதம் ரெடியா.

https://www.youtube.com/watch?v=eHVVbXyevuM

இந்தப் பாடலில் இன்னொரு விஷயமும் உண்டு. ராக முத்ரா என்று ஒரு உத்தி உண்டு. ஒரு ராகம் பாடும் போது அந்த ராகத்தின் பெயரை சாஹித்யத்தில் ஒரு சொல்லாக கையாள்வது. 'எழுந்தோடி' வருவாரன்றோ.. 'தர்பாரில்' எவரும் உண்டோ..'காணடா(கானடா)'.. என்பன அந்த வரிசையில் வரும்.

'எழுந்தோடி சங்கராபரணனை அழைத்து வாடி தர்பாருக்கு ' என்பது அரியக்குடியின் த்ரிராக பல்லவி.. சேஷு அசத்துவார்..

ராஜா இந்தப்பாடலில் 'அடியே மோகனா அடுப்படி எனக்கென்ன சொந்தமா', கல் + ஆணி = கல்யாணி  ராகம் போலவே சைவ பிரியாணி, 'ராகம் வசந்தா நானும் குடித்து பார்க்க ரசம் தா' போன்ற இடங்களில் அந்தந்த ராகங்களின் பெயரை பயன்படுத்தியிருப்பார்.
************

மேலே உள்ள 'ராஜாவின் ரமணமாலை' என்ற தொகுப்பில் வரும் இந்தப் பாடலும் ஸ்வராக்ஷரமாக உள்ள பாடல் தான்.. சதா சதா என்று வரும் சொற்கள் 'ஸ தா ' என்ற ஸ்வரங்களையே கொண்டுள்ளன.

சதானந்தம் என்பவர் ராஜாவின் ஆஸ்தான கிடார் பிளேயர்..ராஜா ஒரு நாள் அவரை 2,3 முறை கூப்பிட்டும் அவர் கவனிக்கவில்லையாம்..சதா..சதா என்று அவரைக் கூப்பிடும் போதே இந்த வரிகள் ராகத்துடன் தோன்றியதாம். அப்படியே முழுப்பாட்டையும் எழுதி விட்டாராம்.

வரிகளும் இசையமைப்பும் எப்படி ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்பாடல் நல்ல உதாரணம். அதா, இதா என்ற இடத்திலும் இதா, அதா என்ற இடத்திலும் மனம் எப்படி மேலும் கீழும் அலைகிறது என்பதை ஸ்வரத்திலேயே காட்டியிருப்பார்.

சதாசிவா 'என்றுனை ஓர் நொடிப்பொழுதும் இடைவிடாது'.. என்ற இடத்தில் இசையும் இடைவிடாது இருக்கும். மூச்சு விடாமல் பாடுவார்.
கேட்டு மகிழுங்கள்.

https://www.youtube.com/watch?v=txaJIbWvS6k



https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1444871262211262/

No comments:

Post a Comment